
அனைவருக்கும் வணக்கம்,
நான் புதுவை என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த கரைக்களில் பிறந்தவன் தற்போது திருவாரூரில் செட்டில் ஆகி விட்டேன், பொதுவாக பாண்டிசேரி என்றால் உடனே அனைவருக்கும் ந்யபகம் வருவது சரக்கு என்னும் சொல்தான், என்னை போன்று அங்கு பிறந்தவர்களுக்கு அவ்வாறு சொல்லபடுவது அவ்வளவு ஒன்றும் மகில்ழ்ச்சி இல்லை தான் ஆகவே இந்த பெயரை மாற்ற என்னால் ஆனா சிறு முயற்சி .
பொதுவாக நாகப்பட்டினத்திலிருந்து சென்னையோ அல்லது சென்னையிலிருந்து நாகபட்டினமோ பேருந்தில் பயணம் செய்திருப்பவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள் புதுவைஇன் சாலயின் தரம் பற்றி, பொதுவாக அனைத்து வளைவுகளும் தடுப்பு சுவருடன் இருக்கும் , மேலும் சாலைகள் நேராக சாலின் வளைவுகளின்றி மின். சாலையின் மின் விளக்குகள் பழுதின்றி இருக்கும்
குறைந்தது 100 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை இருக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கொம்யின் பஞ்சயது இருக்கும் ,இருக்கும் என்பதை நன்றாக செயல்படும்.
பொதுவாக தமிழகத்தில் பிறப்பு சான்றிதல் பெற 3 முதல் 5 நாட்கள் ஆகும் ஆனால் புதுவையில் காலையில் விண்ணபித்து மாலையே பெற்று விடலாம்.
வங்ககடலில் புயல் சீற்றத்தால் ஒவ்வொரு முறையும் புதுவை பதிக்கப்படும், அது போன்ற சமயங்களில் நிவாரண பொருட்க்கள் வெறும் பத்திரிக்கைகள் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டு பாத்திரத்திற்கும் வந்து சேரும்.
புதுவையில் சட்ட மன்ற உறுப்பினர்களை சாமானிய மக்களும் எளிதில் பார்க்கலாம். குறைகளை சொல்லலாம்.
ஒவொரு கொம்யின் பன்ச்யதுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கால்நடை மருத்துவமனைகளும் உரிய முறையில் செயல் படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு ஊர்களிலும் நூலகங்கள் உள்ளன.
என்னதான் எவ்வளவு சொன்னாலும் அந்த பெயர் மாறாது என எனக்கு நன்றாக தெரியும், இருந்தாலும் ஒரு நப்பாசைதான்.

1 comment:
inteihi da un pathivu nallarukku
Post a Comment