அனைவருக்கும் வணக்கம்,
இது என்னுடைய கடல் வாழ்வின் ஒரு நிகழ்வு, 2005 ஆம் வருடம் எங்கள் கப்பல் பர்மாவிற்கு சிங்கபோரிலிருந்து புறப்பட்டது, நாங்கள் malaka strait என்கிற இடத்தில் கடற்கொள்ளையர்களால், தக்கபட்டோம் (எங்கள் கப்பல் thruster's எனப்படும் சுழற்சி ரெக்கை இல்லாத கப்பல் அகவே ஒரு போட் மூலம் எங்கள் கப்பல் இழுத்து செல்லப்படும் ), கடற்கொள்ளையர்கள் எங்கள் கப்பலின் இழுவை படகிற்கு சென்று அதன் captain,chief engineer ஆகியோரை கடத்தி சென்றனர், கொள்ளையர்கள் எங்கள் கப்பலில் ஏற முற்பட்டு முடியாமல் அவர்களை கடத்தி சென்றனர்,ஒரு வழியாக நாங்கள் pinang எனப்படும் மலேசியா கரைஒரம் ஒரு வாரம் தங்கிருந்து பிறகு பர்மா புறப்பட்டோம்.
நான் பொதுவாக சரித்திர நாவல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவன், ஒருமுறை நான் சாண்டில்யனின் நாவல்களை படிக்கும் போது , அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே malaka strait, பகுதயில் கடற்கொள்ளை அதிகம் நடந்திருப்பதாக படித்தேன் அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது ஏன நினைக்கும் போது, மனிதன் என்னதான் மாறினாலும் அவன் குலத்தொழில் மாறவில்லை என்று நினைத்து கொண்டேன்.
Sunday, December 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment