Tuesday, December 9, 2008

புதுவைக்காக ஒரு பதிவு


அனைவருக்கும் வணக்கம்,
நான் புதுவை என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த கரைக்களில் பிறந்தவன் தற்போது திருவாரூரில் செட்டில் ஆகி விட்டேன், பொதுவாக பாண்டிசேரி என்றால் உடனே அனைவருக்கும் ந்யபகம் வருவது சரக்கு என்னும் சொல்தான், என்னை போன்று அங்கு பிறந்தவர்களுக்கு அவ்வாறு சொல்லபடுவது அவ்வளவு ஒன்றும் மகில்ழ்ச்சி இல்லை தான் ஆகவே இந்த பெயரை மாற்ற என்னால் ஆனா சிறு முயற்சி .
பொதுவாக நாகப்பட்டினத்திலிருந்து சென்னையோ அல்லது சென்னையிலிருந்து நாகபட்டினமோ பேருந்தில் பயணம் செய்திருப்பவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள் புதுவைஇன் சாலயின் தரம் பற்றி, பொதுவாக அனைத்து வளைவுகளும் தடுப்பு சுவருடன் இருக்கும் , மேலும் சாலைகள் நேராக சாலின் வளைவுகளின்றி மின். சாலையின் மின் விளக்குகள் பழுதின்றி இருக்கும்
குறைந்தது 100 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை இருக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கொம்யின் பஞ்சயது இருக்கும் ,இருக்கும் என்பதை நன்றாக செயல்படும்.
பொதுவாக தமிழகத்தில் பிறப்பு சான்றிதல் பெற 3 முதல் 5 நாட்கள் ஆகும் ஆனால் புதுவையில் காலையில் விண்ணபித்து மாலையே பெற்று விடலாம்.
வங்ககடலில் புயல் சீற்றத்தால் ஒவ்வொரு முறையும் புதுவை பதிக்கப்படும், அது போன்ற சமயங்களில் நிவாரண பொருட்க்கள் வெறும் பத்திரிக்கைகள் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டு பாத்திரத்திற்கும் வந்து சேரும்.
புதுவையில் சட்ட மன்ற உறுப்பினர்களை சாமானிய மக்களும் எளிதில் பார்க்கலாம். குறைகளை சொல்லலாம்.
ஒவொரு கொம்யின் பன்ச்யதுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கால்நடை மருத்துவமனைகளும் உரிய முறையில் செயல் படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு ஊர்களிலும் நூலகங்கள் உள்ளன.
என்னதான் எவ்வளவு சொன்னாலும் அந்த பெயர் மாறாது என எனக்கு நன்றாக தெரியும், இருந்தாலும் ஒரு நப்பாசைதான்.

அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி, இன்று நான் தினமலரில் பார்த்த படத்தை , பற்றி ,
பொதுவாக மதநம்பிக்கை எப்படி மனிதனில் மேலோங்குகிறது, அருகில் உள்ள படத்தில் கொட்டும் மழையில் எவர்கள் தொழுகை செய்கிறார்கள், இங்கே எது இவர்களை இவ்வாறு, சென்ற வாரம் நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம், அவர் மலேசியா வாழ் இந்தியர் அவர் மலைய்சியாவில் தைபூசம் எவ்வாறு கொண்டாடப்படும் என்பதை பற்றி என்னிடம் கூறினார் மேலும், மலேசியாவில் தைபூசம் மிக சிறப்பகக்கொண்டடபடுகிறது மேலும் அந்த தினத்தில் அனைத்து இந்தியர்களும் ஒன்று கூடி விடுகின்றனர், எங்கள் பேச்சில் என் நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் நம் ஊரில் தைபூசம் அவ்வாறு சிறப்பாக கொண்டடபடுமா என்று, என்னை பொருத்தவரைஇல் இல்லை தன்.
நான் பொதுவாக முஸ்லீம் மக்கள் உடன் தான் கடந்த 5 வருடமாக இருக்கிறேன் பொதுவாக நம் ஊரில் ரம்ஜான் நோன்பு எல்லாருலும் கடைபிடிக்க படுகிறது, பள்ளி நாட்களில் நிறைய மாணவர்கள் மயங்கி விழுந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இங்கு மலேசியவில் சற்று குறைவு, கப்பலில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பொதுவாக அதை கடை பிடிப்பதில்லை.
இங்கே என் சொந்த கருத்துகள் சில பொதுவாக எங்கு ஒரு மதம் அல்லது இனம் சிறுபன்மையாக உள்ளார்களோ அவர்கள் அந்த மதத்தின் கோட்பாடுகளை சிறப்பாக கடைபிடிக்கிறார்கள், உதாரணம் மலைய்சியாவில் தைபூசம் மற்றும் இந்தியாவில் ரம்ஜான்.
பொதுவாக இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையை கேலி செய்துக்கொள்வதில்லை ஆனால் ஹிந்துக்களும் கிருச்துவரக்ளும் அவர்களை அவர்களே கேலி செய்கின்றனர். சபரி மலைக்கு மலை போடும் சீசனில் நம் நலேடிகளில் நாம் அதை பற்றி அதிகமான கேலி நகைசுவைகலை காண்கிறோம், அதற்தமாக வலைத்தளத்தில் ஏசு பற்றி நகைசுவை படங்கள் அதை செய்பவர்கள் கிருச்வர்கள், ஆனால் இஸ்லாமியர்கள் அவர்களை அவர்கள் தாழ்த்தி கொள்ளவதில்லை, அகவே மத நம்பிக்கை உள்ளவர்களே முதலில் உங்கள் மத்தி கேலி செய்வதை விடுங்கள்.
மேலே நான் சொன்னவை என் சொந்த கருத்து இதை பற்றி வாசிப்பவர்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Sunday, December 7, 2008

இந்தியாவும் சிங்கபூரும்

அனைவருக்கும் வணக்கம்,
நான் ஒரு இந்தியன் இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே ஆனால் ஒரு சில ஒப்பீடு என் பார்வையில்,
நான் 2003 வருடம் வேலைக்காக சிங்கப்பூர் வந்தேன் அப்பொழுது, ஒரு பெட்டி சிகரெட்டின் விலை 3 டாலர் அதாவது,75 ரூபாய் , ஒரு கிலோ அரிசி 1 டாலர் ,அன்று இந்தியாவில் அதே சிகரெட்டின் விலை 20 ரூபாய், ஒரு கிலோ அரிசி 15 ரூபாய் ,இன்று சிங்கபூரில் சிகரெட்டின் விலை 300 ரூபாய் , அரிசி 2 டாலர் , ஆனால் இந்தியாவில் இன்று சிகரெட்டின் விலை 25 ரூபாய் ஆனால் அரிசியோ வாங்கமுடியாத விலை .
அரசாங்கம், எது அவசியமோ அதன் விலையை கட்டுக்குள் வைக்காமல் எது அனவசியோமோ எது புடிப்பவனை கெடுக்குமோ அதன் விலையை ஏற்றாமல் பாதுகாகிறது.
பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை, இது போன்று அபராதம் விதிப்பதை விட சிகரெட்டின் விலையை உயர்த்தலாம் தாறு மாறாக கூட .

முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்,
இது என்னுடைய கடல் வாழ்வின் ஒரு நிகழ்வு, 2005 ஆம் வருடம் எங்கள் கப்பல் பர்மாவிற்கு சிங்கபோரிலிருந்து புறப்பட்டது, நாங்கள் malaka strait என்கிற இடத்தில் கடற்கொள்ளையர்களால், தக்கபட்டோம் (எங்கள் கப்பல் thruster's எனப்படும் சுழற்சி ரெக்கை இல்லாத கப்பல் அகவே ஒரு போட் மூலம் எங்கள் கப்பல் இழுத்து செல்லப்படும் ), கடற்கொள்ளையர்கள் எங்கள் கப்பலின் இழுவை படகிற்கு சென்று அதன் captain,chief engineer ஆகியோரை கடத்தி சென்றனர், கொள்ளையர்கள் எங்கள் கப்பலில் ஏற முற்பட்டு முடியாமல் அவர்களை கடத்தி சென்றனர்,ஒரு வழியாக நாங்கள் pinang எனப்படும் மலேசியா கரைஒரம் ஒரு வாரம் தங்கிருந்து பிறகு பர்மா புறப்பட்டோம்.
நான் பொதுவாக சரித்திர நாவல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவன், ஒருமுறை நான் சாண்டில்யனின் நாவல்களை படிக்கும் போது , அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே malaka strait, பகுதயில் கடற்கொள்ளை அதிகம் நடந்திருப்பதாக படித்தேன் அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது ஏன நினைக்கும் போது, மனிதன் என்னதான் மாறினாலும் அவன் குலத்தொழில் மாறவில்லை என்று நினைத்து கொண்டேன்.

முதல் பதிவு

அனைவருக்கம் வணக்கம்,
நான் பிரகாஷ் இது என்னுடைய முதல் பதிவு நான் இந்த தளத்திற்கு புதியவன் நான் ஒரு கடலோடி, கடந்த ஆறு வருடங்களாக கப்பலில் வேலை பார்க்கிறேன் அது எண்ணெய் சார்ந்த வேலை பார்க்கும் கப்பல் , நான் இந்த தளத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.